சென்னை, மே 5- வட மாநிலங்களிலிருந்து, வரத்து குறைந்துள்ளதால் பூண்டு விலை அதிக ரித்துள்ளது. தமிழகத்துக்கு ஹரியானா, தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிர தேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து பூண்டு விற்ப னைக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் குறிப்பாக, தேனி மாவட் டம், வடுகப்பட்டி பூண்டு சந்தையில் இருந்து, பிற மாவட்டங்களுக்கு, பூண்டு விற்ப னைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் வடுகப்பட்டி சந்தைக்கு, வட மாநிலங்க ளில் இருந்து பூண்டுவரத்து குறைந்துள் ளது. ஏற்கனவே கொண்டு வரப்பட்ட பூண்டு, ஏலம் இல்லாததால், வடுகப்பட்டி சந்தையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில், வரத்து குறைவால் பூண்டு விலை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, பூண்டு வியாபாரிகள் கூறு கையில், “சந்தையில், 40 நாட்களாக பூண்டு ஏலம் நடக்கவில்லை. ஊரடங்கு உத்தர வால், புதிய பூண்டு வரத்து இல்லை. இதனால், பெரிய ரக பூண்டு ஒரு கிலோ 200 ரூபாயில் இருந்து 250 ரூபாய், சிறிய ரக பூண்டு 100 ரூபாயிலிருந்து 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது” என்றனர்.